என் அக்காவின் குழந்தை

வாசலில் வரும் போது

ஓடி வந்து பார்க்கிறாய்

நான் இல்லாததை அறிந்து

ஓ! என்று அழுகிறாய்

நான் ஏறிட்டு பார்க்கும் போது

புன்னகைக்கிறாய் ...................

அருகில் வந்து அமரும் போது

மடியில் வந்து தொற்றிகொள்கிறாய்

உணவருந்த மறந்து

என்னுடன் விளையாடுகிறாய்

விலகி செல்லும் போது

மீண்டும் ஓடிவந்து

ஓ! என்று அழுகிறாய்

உன்னை பார்க்கும் போது

என் கண்களிலும் நீர் ததும்புகிறது

ஆனந்தத்தில் ........................

எழுதியவர் : ம.கஸ்தூரி (22-Jan-13, 10:07 pm)
சேர்த்தது : மகாகஸ்தூரி
பார்வை : 136

மேலே