விஸ்வரூபம்
விஸ்வரூபம்
*வீதிக்கு வந்தொரு
விஸ்வரூபம் எடுக்கிறது
இந்தியாவின் இறையாண்மை ...
* கமல் படத்தில்
கடவுளை கலப்படம் செய்து
கலையை கொலை செய்யாதீர்கள் !!
* திரைமறைவில் திரைப்படங்களை
திருமறை தடுத்து
திருவிளையாடல் ஆடுகிறது..
*மதம் சம்மதம் சொல்லுமா ?
இல்லை மதத்தின் பேரால்
மனிதம் மரணம் ஏகுமா?
* தட்டுங்கள் திறக்க படும்....
கேளுங்கள் கொடுக்க படும்...
எல்லாம் சொன்னார் ...
எப்போது சென்சார் செய்ய சொன்னார்?
* ராமுவும், காதரும், டேவிடும்
ஒன்றாக பக்கம்பக்கம் உட்காரும்
ஆலயம் ... திரையரங்கம்..
* ரசிகனிடம் ரசனை தவிர
விசாரணை வேண்டாம்...
கலையில் கடவுளை காணலாம்
கடவுளை கலையாய் காணலாம் ..
தயவு செய்து இதில் கலப்படம் வேண்டாம்..

