ஒத்த ரூபா உன் நெத்தியில....

பிறப்பிற்கும் இறப்பிற்கும்
நடுவுல...
மனுசனா வாழ்வதிலே
குழப்பமில்ல...
மனசாட்சியோட வாழயில
குற்றவுணர்ச்சிக்கு வழியில்ல...
செய்யுற செயலே மத்தவுக
மனசில....
சொத்தாக நிக்குமே அவுக
வாழ்கையில...
உதவி செய்வதினால
கண்ணீரை துடைப்பத்தினால
பழி வரப்போவதில்ல
பாவம் வரப்போவதில்ல
வாழும் இந்த வாழ்கையில
வசவுகளுக்கு பஞ்சமில்ல...
வாழ துணிஞ்சா நீயும்
வாழ்வது ஒன்னும் துன்பமில்ல...
ஓடி ஓடி உழைத்தாலும்
வாரி வாரி குவிச்சாலும்
வசதியாக வாழ்ந்தாலும்
வாரிசுகளுக்கு சொத்து சேத்தாலும்
பாடையில போகையில
ஒத்த ரூபா உன் நெத்தியில
அது கூட சொந்தமில்ல கடைசில....
-PRIYA