தொலைந்த சுவாசம் ..
என் அழகிய கிராமமே ..
பசுமையை தொலைத்துவிட்டு
பட்டணத்தில்
வெறுமையை சுவாசிக்கிறேன் ..
தூசியில்லாத காற்றில்லை ..
தூய்மையான நீரில்லை ..
அமைதி என்ற சொல்லுக்கு
அர்த்தமே இங்கில்லை ...!!
எந்திரமாய் வாழ்கை ..
பம்பரமாய் பாசமும் .. நேசமும் !!
எதிர் வீட்டில் யாரிருக்கா..
பக்கத்துக்கு வீடு முஸ்லிம் வீடா..??
தெரிந்துகொள்ள நேரமில்லை ..!!
மாமன் மச்சான் ..மாமி ..மச்சி
உறவு கொள்ள
ஒருத்தருக்கும் விருப்பமில்லை ...!!
பணம் .. பதவி ..பகட்டு
சுருங்கி விட்டது மனித வாழ்வு ..!!
அடுத்தவன் கஷ்டம் தெரிந்து
அழ ஆளில்லை ..!!
விடிவதும் ..முடிவதும்
இவர்கள் உலகம் இவ்வளவுதான்..
கட்டிடம்... கார் ...ஆலை
நிம்மதியில்லாத நீண்ட பயணம் ..
எல்லாம் கிடைக்கிறது.. !!
ஞாயிற்று கிழமைகளில் கூட
கிடைக்காத ..
பாசமும் நேசமும் தவிர ..!!