முத்தங்கள் ... என் வாழ்வில்
இந்த பூலோகம் வந்த பின் தொட்டு தொடாமல்
பட்டும் படாமலும் கொடுத்த அன்னையின் முதல் முத்தம்
பெற்றவரின் பெற்றவர்கள் எனை வாரிசென அணைத்து
வகையாக கொடுத்த உரிமை முத்தம்
அடியோடு அடி வைத்து அழகாக நடக்கையில்
உயிர் உறுப்பில் உதடு பதித்த அன்னையின் ஆனந்த முத்தம்
பள்ளி செல்லும் பாலகனாய் வளர்ந்த போது
பரிதவிப்பாய் வந்த தாயின் முத்தம்
கண்ணில் பட்டவளை காதலியாக்கி கருத்தாக நான்
கொடுத்த இனிய காதல் முத்தம்
மனதில் வந்தவள் மனைவியானபின்
உயிரை வாட்டி எடுக்கும் முத்ததின் உச்சம்
பிள்ளை ஒன்றை பெற்ற பின்
பிறர் முன் குடுக்க நினைத்த ஆனந்த ஆவல் முத்தம்
சில முத்தங்கள் மட்டுமே இங்கு
ரகசிய முத்தங்கள் சிலிர்க்க வைக்கும் சிந்தனையை
முத்தங்கள் வெறும் சத்தங்கள் மட்டுமல்ல
உயிரையும் உறவையும் ஒன்றிணைக்கும் பாலம்
அல்ல குறையாத அமிர்தம்
எனக்கொரு பேராசை
மரண வாயிலில் எட்டும் போது என் சந்ததிக்கு
பேரின்ப முத்தமிட்டு இவ்வுலம் வீடு செல்ல வேண்டும்.... ள் ... என் வாழ்வில்