காதல் கொண்டாலே...!!!

காதல் கொண்டாலே...
கண்கள் கலந்தாடும்....
காற்றின் மேல்நாமும்.....
பறப்பது போலாகும்....
கனவில் நாம் காணும்.....
காட்சிகள் ஒன்றாகும்...
காலையில் எப்போதும்...
கனவுகள் மேலோங்கும்...
நீ காதல் கொண்ட முல்லை..
நாம் காண்போம் காதலின் எல்லை...
தோல்வியை நித்தம் தொடர்ந்தாலும்,
உயிர்க்காதல் மரிக்காது...

(காதல் கொண்டாலே...)

வான்மழையின் குடையின் கிழே,
நாம் தொலைவோமே அன்பே....
வானவில்லின் வண்ணம் பார்த்து,
நாம் வாழ்வுரைப்போம் அன்பே....
வாழும் நாளில் காதலை....,
நாம் வரைந்தே பார்போம் ஓவியமாய்...!!!
வாழ்ந்த பின்னும் காதலை....,
நாம் மாற்றி வைப்போம் காவியமாய்...!!!
உயிர்கள் மறையலாம்,
உயிர்க்காதல் என்றும் வாழ்ந்திடுமே....!!!
உலவும் உயிரெல்லாம்,
காதல் இல்லையேல் உறைந்திடுமே ....!!!

(காதல் கொண்டாலே...)

மர ஊஞ்சலின் மீதிலே தான்,
அடி நீ இன்று ஆடினாய்....!!!
என் மன ஊஞ்சலின் மீதிலே தான்,
அடி நீ என்று ஆடுவாய்....???
தாய் மடி தேடி ஓடினோம்...,
அந்த காலம் கண்விட்டு மறைகிறதே....!!!
காதலின் வலி தேடுவோம்...,
அந்த காலம் கண்முன் தெரிகிறதே....!!!
காதலில் தோல்விகள் ஆயிரம் என்று அறிவோமே,
ஆயினும் கதை மாற்றிட பல உயிர்கள் போரிடுதே...!!!
மண்மீது வாழும் உயிர்கள் எல்லாமும்,
மனதில் கொண்டாடும் காதல் தெய்வம் தான்....!!!
காதல் காதல் நம் மூச்சு.....!!!
எங்கும் எதிலும் இது பேச்சு...!!!
வாழ்வை வாழ்வோமே நாம்,
காதல் தேரேறி......!!!

(காதல் கொண்டாலே...)

இவன்,
நிர்மல் குமார்

எழுதியவர் : நிர்மல் குமார் (4-Feb-13, 7:39 am)
பார்வை : 212

மேலே