ஒரு அப்பாவை பற்றி ஒரு மகன்
என் அப்பா 1950களின் இறுதியில் பிறந்தார்.அவரது குடும்பம் 6 நபர்களை சதீஷ்குமார் கொண்டது(அம்மா,அப்பா,3அக்காக்கள்,என் அப்பா).அவருடய இளம் பருவத்தில் அவர் அப்பாவை இழந்தார்.பின் முதல் அக்காவுக்கு அவர் மாமாவுடன் திருமணம் நடந்தது.இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது.சில வருடங்கள் கழித்து அக்காவும் மாமாவும் பிரிந்தனர். இரு சிறிய குழந்தைகளையும் தவிக்கவிட்டு அக்கா இறந்துபோனார்.
இதற்கிடையில் என் அப்பாவின் தாயார் தன்னால் முடிந்த அனைத்து சிறு வணிகத்தை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.என் அப்பாவின் இரு அக்காக்களும் பூக்கல்கட்டி விடுவீடாக சென்று விற்றுவருவர்கள்.
குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு ஒரு வீட்டில் வீட்டுவேலைபார்த்து கொண்டு இருந்தார்(இரு வேலை உணவுக்காக).தனது 13-ம் வயதில் ஒரு தையலகத்தில் காஜா பையனாக வேலைக்கு சேர்ந்தார். தனது கடின உழைப்பால் அந்த கடைக்கு 17-ம் வயதில் முதலாளி ஆனார். இப்பொழுது அவரது குடும்பம் 6 நபர்களை கொண்டது(அம்மா,2அக்காக்கள்,முதல் அக்காவின் 2 மகள்கள்,என் அப்பா).
அந்த சமயம் பொருளாதார சூழ்நிலை காரணமாக என் அப்பாவின் 2-வது அக்காவிற்கு திருமணம் செய்ய முடியவில்லை(காலம் கடந்தது பின்னாளில் அவருக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை).என் அப்பாவின் கடினமான உழைப்பு அதிகரித்தது.தினசரி 20 முதல் 22 மணி நேரம் வேலை செய்தார்.வருமான அதிகரித்தது.என் அப்பாவின் 2-வது அக்காவுக்கும் அரசு வேலை கிடைத்தது.குடும்ப வருமானம் பெருகியது.
என் அப்பாவின் 3-வது அக்காவிற்கு திருமணம் நடந்தது.அவருக்கு 5 குழந்தைகள் பிறந்தன.பின்னர் என் அப்பா இறந்துபோன அக்காவின் முத்தமகளை திருமணம் செய்தார்,நான் பிறந்தேன்.2-வது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்,விடு கட்டி கொடுத்தார்,இரு குழந்தைகள் பிறந்தன.
இதற்கிடையில் என் அப்பா 3-வது அக்காவிற்கு விடு கட்டி கொடுத்தார்.அவளின் 2 மகன்களுக்கு வேலை அமைத்து கொடுத்தார்.அவளின் ஒரு மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.3-வது அக்காவின் கணவர் குடும்பத்தை கண்டுகொள்ளமாட்டார்.எனவே 3-வது அக்காவின் குடும்பத்தயும் என் அப்பாவே கவனித்துக்கொண்டார்.என் அப்பா அவரின் அம்மாவை இழந்தார்.இப்பொழுது குடும்ப நபர்களின் எண்ணிக்கை 15.
என் அப்பா தன்னுடைய எளிமையான வாழ்வில் நேர்மையாக செயல்பட்டு, பொதுவாழ்வில் சிறப்பாக செயல்பட்டு,புகழ் அடைந்தார்.ஆனால் அவருக்கு, அவரின் குடும்பத்துக்கு என ஏதும் செய்துகொள்ளாமல்,தன் அக்கா குடும்பத்திற்கும்,அக்கா பிள்ளைகளுக்கும்,பேர பிள்ளைகளுக்கும்,ஊர் மக்களுக்கும்,தன்னை நம்பினவருக்கும் செய்தார். உதவி கேட்டு வருபவர்களுக்கு என் அப்பாவின் அகராதியில் "இல்லை" என்ற வார்த்தை கிடையாது.
காலம் கடந்தது (நன்றிகடன் என்ற வார்த்தை மறந்த,வளர்ந்து வந்த பாதை மறந்த) உதவி பெற்ற உறவுகள்,ஊர் மக்கள் பிரிந்தனர்.இன்று எங்கள் குடும்பத்தின் எண்ணிக்கை 4 நபர்கள்(குடும்பத்திற்காக திருமணம் செய்யாமல் உழைத்து சருகாய் போன என் அப்பாவின் 2-வது அக்கா,ஊருக்காகவும் உறவுக்காகவும் உழைத்து உடல் முழுவதும் நோயை பெற்றுக்கொண்ட என் அப்பா,என் அம்மா,எப்படி வளமான வாழ்வை குடும்பத்திற்கு தருவது என்ற ஏக்கதுடன் நான்).
இன்று,என் அப்பா குடும்பத்தின் வாழ்க்கை ஒரு சிறிய குடிசை வீட்டில்,ஒரு மிதிவண்டியுடன் "சம்பாரித்து சாப்பிட்டு சேமித்த காலம் போய், சம்பாரித்தால்தான் சாப்பாடு" என்ற கால சுழற்சியில் சிக்கிஉள்ளது.நானோ உழைப்பு,பிழைப்பு என்று காலத்துடன் போராடும் ஒருவன்.
இப்படிக்கு,
ஒரு மகன்.