******உதடுகளே ஒட்டாத கண்ணீர் கவிதையாய் எந்தன் காதல்********

உதடுகளே ஒட்டாத கண்ணீர் கவிதையாய்
எந்தன் காதல்

என்னவளே
உனக்காவே இந்த கவிதை
எழுத எண்ணங்கள் எழுந்தது
எழுத நினைத்தால்-எந்தன்
எண்ணங்களில் ஏதேதோ கோளாறு???

சொற்களோடு சோழியிட்டு, சோழியிட்டு
சேர்த்த வார்த்தைகளை கவியாக்கி,
உன் விழி தொட்டே அரங்கேற்ற
எண்ணிலடங்கா எண்ணங்கள்
எனக்குள் குதித்தோடியது...

குதித்தோடிய எண்ணங்களை
கையாள் தடுத்தேன்,உடைத்து சென்றாய்!
நீராக்கினேன் ஆவியானாய்!
கனவாக்கினேன் கண்களோடு ஒளிந்தாய்!
தீயாக்கினேன் காற்றோடு கலந்தாய்!
கவியாக்கினேன் காகிதத்தில் கலந்தாய்!

நீ நீயாகவே
இருந்தாய்,இருக்கிறாய்...
நான்தானே காதலாகினேன்,
இன்னொரு நாளில்
காதலனாகினேன்...

நான் சந்தித்த கடைசி
காதல் தேவதை நீ...
உன்னை தரிசித்த நாட்களே
எனக்குள் கல்லூரி நாட்கள்...

உன்னை கானாத நாட்கள்
இன்றோடு தொடங்கினேன்,
வருடங்கள் கடந்தது..

(சில ஆண்டுகள் கழித்து,இன்னொரு நாளில்)

உன்னை
இணையதளத்திள் சந்தித்தேன்
எனக்குள் உறங்கி கொண்டிருந்த
அத்தனை காதலை
உன்னை சேரவே
இதை எழுதுகிறேன்...

எழுத்துக்கள் தீர்ந்தன
எழுதுகோள் நடுங்கியது
உன் கண்கள் வழியாவது
உன் உயிர் கலந்தேன்
காதலனாய் அல்லாது...

இந்த நொடியாவது
நீ - நீயாகவே இரு
நான் -நானகவே இருக்கிறேன்..

உயிரோடு உடல் இல்லை
எந்தன் நினைவோடு நீயில்லை
உந்தன் நினைவுகளோடு
உதடுகளே ஒட்டாத
கண்ணீர் கவிதையாய்
எந்தன் காதல்..

-க பரமகுரு

எழுதியவர் : -க பரமகுரு (10-Feb-13, 1:21 pm)
சேர்த்தது : Paramaguru
பார்வை : 211

மேலே