கடவுள் கடவுளாகிப்போனார் - 11
கடவுள் – 11
பூங்காவில் அமர்ந்து
வண்ணத்துப்பூச்சியை
ரசித்துக்கொண்டிருந்தார் கடவுள்.
பூக்கள் அழகா?
வண்ணத்துப்பூச்சி அழகா?
கடவுளே நடுவராகவும்
வலது இடது பேச்சாளராகவும் இருந்து
ஒரு மணி நேரம்
வெற்றுப் பேச்சு பேசி முடிவெடுக்கப்பட்டது
இரண்டுமே அழகென்று!
சிறுவர்கள் ஓடிவிளையாடினார்கள்.
பூக்கள் அழகு என்றான் காதலன்!
பறிக்க முடியாத வண்ணத்துப்பூச்சிதான்
மிகவும் அழகு என்றாள் காதலி!
அந்தக் காதலர்கள் சிறிது இடைவெளியில்
முத்தத்தோடு கொஞ்சிக் கொண்டார்கள்.
முதியவர்கள் கைதாங்களாக நடந்தார்கள்.
விவாகரத்தானவளின் பார்வை –
விவாகரத்தானவனின் புது மனைவி
ஊனமுற்றவனின் தன்னம்பிக்கை –
போதையில் தடுமாறிய நடை -
ச்சி… என்ன அது
வண்ணத்துப் பூச்சியைத்தானே
ரசித்துக்கொண்டிருந்தேன்.
கடவுளே!
“மனசு ஏன் கட்டுப்பாட்டுக்குள்
வரமாட்டேன்கிறது” என்று
நொந்துகொண்டார் கடவுள்!!!
--
வணக்கம் அன்பு உறவுகளே... நண்பர்களே...
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.
21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.
வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.
புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் அனுப்பி வைக்கப்படும்.
தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும்.
என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா
நன்றி.

