ஏன் இந்த நிலமை இவர்களுக்கு மட்டும்...???
சுருங்கிய தோல்கள்...
ஒளி இழந்த கண்கள்...
ஏதோ...
ஒரு ஏமாற்றம்...
மனதில்...
ஒரு தடுமாற்றம்...
விழிகளின்
ஓரம் வழியும்...
கண்ணீர் துளிகளில்
ஒரு ஏக்கம்...
மனதில் என்றும்... மாறாத
ஒரு துக்கம்...
வலிகள்
ஆயிரம் கண்டு
உன்னை
பெற்றதனாலே...
இன்றோ...
வலிமை இழந்ததும் வீதியில் நிறுத்தியவனே...
உன் கூந்தலை
முதலில் தடவி...
உன் நெற்றியில்
அழகாய் முத்தமிட்டு...
உன் அழுகையை அழகாய் ரசித்து...
உன் பசியை போக்கியவள்...
உன் அன்னை அல்லவா...???
இன்றோ...
அவள் கூந்தலை பிடித்து...
அவள் நெற்றியில் உதைத்து...
அவள் அழுகையை
கூட அரவனைக்க
மறந்து...
வீதியில் பசியோடு நிறுத்திய
கொடுமைக்காரனே...
உன் விரல் பிடித்து நடக்க
கற்று தந்தவளை...
இன்று...
அவள்
விரல் பிடித்து
வெளியே தள்ளிய
மனம் இல்லாத
மனிதனே...
உனக்கும்
இந்த நிலை நேரலாம்...
நாளை...
உன் பிள்ளையால்...
மறந்துவிடாதே...
நீ...
விம்மி
அழுதபோது
நிலவை காட்டிய
உன் அன்னையை... இன்று உன் மொட்டைமாடியில்
கூட
இடம் தாராமல்
விம்மி அழவைத்தவனே... நரகம் கூட...
உன்னை
ஏற்றுக் கொள்ள மறுக்கும்...
மழலையில் நீ... அன்னை என்றவளை... இன்று...
அனாதையாக்கி
பார்க்க நினைக்கும்...
உன் என்னம் இனியாவது மாறட்டும்...
நேரில் கண்ட வலிகளுடன்...
உங்கள்
நண்பன்...
Shri...

