சுவாசக் காற்றே 2

காற்றே....!
உலவுமிடம் எங்கினும்
உகந்து தொடர்கிறாய்
ஊடுருவி முன் விரைந்து
வெண் பஞ்சாய் விரிகிறாய்

கடந்து வந்த காலநதியில்
கவர்ந்தவர் கோடி
காத்திருந்து என்னை மட்டும்
களவு செய்கிறாய்

சொந்தமாக்க சதையம் பாட
சந்தம் தேடுகிறாய்
பந்தமாக்கி பாசம் பொழிய
அந்தரங்கம் நாடுகிறாய்

நேசத்தோடு வாசம் கொள்ள
நாசி நுழைகிறாய்
சுவாசமாகி உயிர் உறைய
ஆயுள்தானம் செய்கிறாய்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை. அமுதா (11-Feb-13, 3:03 pm)
பார்வை : 129

மேலே