சமையலறையில்

சமையலறையில்..!

எண்ணெயில்
குளித்து தாளித்த
கடுகின் குதியாட்டம்

அதன் மேல் விழுந்து
அடக்கி வைக்கும்
வெட்டி கழுவிய
காய்கறியின் குளுமை

அந்த குளுமை
தந்த
சூடாகியிருந்த
வாணலியின்
இன்ப கூச்சல்
ஸ்..ஸ்..ஸ்…

கூச்சலில் பயந்து
புகையாய் மேலே
பறந்து செல்லும்
நீராவி கூட்டம்

இவர்களின் கூட்டணியில்
சுற்றும் முற்றும்
எழுந்த ‘கமகமக்கும்’
மணம்

யாருக்கு கொடுத்து
வைத்திருக்கிறதோ
இதை ருசிக்க..!

எண்ணியபடி கமகமத்ததை
நுகர்ந்தபடி செல்லும்
அக்கம் பக்கத்தோர்

எதுவுமே தெரியாமல்
குடித்து
மயங்கி கிறங்கி
அந்த
வீட்டில் கிடக்கும்
ஆண் மகன்…!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (6-Nov-24, 9:50 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : samaiyalaraiyil
பார்வை : 26

மேலே