காதலின் தினம்
கடற்கரையில்
கடலும் அலையும் அழகுதான்
கடற்கரை மணல்மேல்
காதலர்கள் நடந்து செல்வதால்
பூங்காவுக்குள்
பூக்களும் செடியும் அழகுதான்
பூச்செடிகளுக்குள் காதலர்கள்
கொஞ்ச்சிக்கொள்வதால்
இதயமும் ரோஜாவும் அழகுதான்
இரண்டையும் காதலர்கள்
பரிசுகளாய் பகிர்ந்துகொள்வதால்
குழந்தைக்கு தாய் தரும்
முத்ததிலும் காதல் உண்டு
சூரியனை சுற்றிவரும்
பூமியின் சுழற்ச்சியிலும்
காதல் உண்டு
இவ்வுலகமே காதலால்
சூழ்ந்திருக்கையில்
காதலை எதிர்க்கும் சக்தி
எவருக்கு உண்டு
மறைந்துபோன காதலை
நினைவுபடுத்தும் தினமாய்!
இறந்துபோன காதலுக்கு
உயிர்தரும் தினமாய்!
சொல்லிவிட்ட காதலை
வாழவைக்கும் தினமாய்!
சொல்லப்போகும் காதலுக்கு
வாழ்த்துச்சொல்லும் தினமாய்!
இத்தினத்தை காதலர்தினமாய்
கொண்டாடமல் காதலின்தினமாய்
கொண்டாடவோம்..!

