மிதிவண்டி

எல்லோரும் கற்றுக்கொள்ளும்
முதல் வாகனம்

பள்ளி பருவம் வரை
உன் பயணத்துனை

சிறுவயதில் உன்னை
சிலிர்க்க வைத்தது நான்

இன்று ஓரங்கட்டிவிட்டாய்
தீண்டத்தகாதவனாய்!

நீ வளர்ந்துவிட்டாய்
நான் தேய்ந்துகொண்டிருக்கிறேன்
உன் மீது உள்ள ஏக்கத்தால்
என் மீது நீ ஏறி
சவாரி செய்யும் ஆசையால்!

எழுதியவர் : தேவி நடராஜன் (15-Feb-13, 3:24 pm)
பார்வை : 107

மேலே