அன்பா ? இல்லையா ?

என்னிடம் மட்டுமே
எண்ணங்களைப் பறிமாறினாள்..
என்னை பற்றியே
மற்றவர்களிடமும் பேசினாள்..
புதியதோர் உலகிற்கே
அழைத்துச் சென்று
புன்னகையில் புரண்டோட விட்டாள்..
புத்துணர்ச்சி கொண்டு பூரித்துக் கொண்டேன்..!!
அன்பின் ஒரே உருவாய் கண்களில் கண்டேன் ..!!
பார்த்துப் பார்த்து கவனிக்கும் தாயா?
தோள் கொடுக்கும் தோழியா ?
அடம் பிடிக்கும் குழந்தையா ?
என் அனைத்துமாய் அவளே இருந்தாள்..!!
இதற்கு மேல் உலகில்
வேறொன்றும் தேவையில்லை
என்று இதயத்தில் பதித்துக் கொண்டேன்...
அதை அவ்வாறே அவளிடம் கூறினேன்
"நான் உன்னுடனே இருந்து விடுகிறேன்" என்று..
அவளோ புன்னகைத்தாள்..சில நேரம் மௌனம் ..
எனக்கு ஒன்றும் புரியவில்லை..
பின்பு மௌனம் களைத்த அவள்
என்ன விளையாடுகிறாய் ?
உனக்கென்ன பைத்தியமா?
மற்றவர்களிடம் பழகியது போல்
தான் உன்னிடமும் ...
நீ இருக்கும் பொழுது மகிழ்ச்சி தான்.
ஆனால் இல்லாத பொழுது வருத்தமில்லை. என்றாள்...
இன்றும் புரியாமல் தான்
புலம்பிக் கொண்டிருக்கிறேன்..
யாரின் மேல் பிழை என்று....!!!!