காதலர்கள் கவனத்திற்க்கு...!
காதலர்கள் கவனத்திற்க்கு...
..................................................
காதாலல், எதைத் தேடுகிறார்கள்...
கண்களால் கண்டவுடன்
கொள்வதா காதல் – இல்லை...இல்லை
அவரவர்களின் சுகபோகங்களை தனதாக்கிக் கொள்ள
தன்னலம் கொள்வதோ காதல்..!
இருபேரின் எண்ணங்களை கலந்துண்ண
தலைபடுவதே காதல்..!
இருக்கின்ற எண்ணங்களின்
உணவில் சரிநிகர் பிரித்து –
பிரித்த உணவில் உன் ருசியை தேடினால்...
அங்கே..!தான்
காணமால் போய்விடுமே காதல்..!
காதலைக் கொண்டு எதை தேடுகிறார்கள்…?
இது, நாள் வரை...
பிடித்தது எது -------- அவனிடம்..!
பிடிக்காதது எது -------அவளிடம்..!
மூடி மறைத்து,
வேஷம் கட்டி, கூடிதிரிவதா…காதல்..?
காதல் என்றாலே...
ஜீவ பரிணாமம்…! என்றார்களே...
ஆனால்.., இன்று…?
ஜீவனை தொலைத்துவிட்டு…
அவரவர், எண்ணப்பரிணாமத்தை மட்டுமே
சவமாய், சுமக்கிறார்களே…!
காதல் என்பது தோற்பதில்லை…!
இது, காலதேவனின் தீர்ப்பு…!
உண்மையின் உணர்வோடு
காதலை உலகுக்கு அளித்திடுவீர்……!

