இதயம் ஒரு வெடிகுண்டு
ஜன்னல்களைத் திறந்தவுடன்
ஜனனத்தின் மறுகுரல் காதின்
ஜவ்வு அதிரும்படியாக கேட்டது.
ஒரு புது யுகம்.
வெடிகுண்டு சப்தம்
காகங்கள் கத்துவதுபோல்
ஆங்காங்கு சிதறின
மனிதனின் இதயம்
ஒரு வெடிகுண்டு
உரசியவுடன் ரத்தங்கள்
கலை நயத்துடன்
வர்ணங்களாய் வழிந்தன
இனிய கானாப்போல் இன்னிசை
இசைமழையாய் இடித்தன அந்த
இழங்கை அசுரர்களின் காதுகளுக்கு
ஜன்னல்களை மூடியவுடன்
ஜனனத்தின் குரல்
ஒரு குழந்தையாய்.
ஜென்மங்கள் பல் எடுத்தாலும்
ஜன்னம் எடுக்காதே
ஒரு தமிழனாய் இந்த ஈழத்தில்
ஏனெனில்,
உன் இதயம் ஒரு வெடிகுண்டு
உரசினால் உரம் போட்டுவிடும் இந்த மண்ணுக்கு
இப்பொழுது நீ செல் இந்த விண்ணிற்கு..
-அரோ