பாலவா ....? பலியானது .....?
தமிழன் தான் வாழ
தன் நிழல் தந்த விருட்சமாடா
உன் தந்தை -அவர்
தமிழ் காக்க விதைத்த
விதையடா என் தங்கமே -நீ
தமிழீழ தலைவன்
தந்த தங்க மகனே
தன் நலம் பேணும் சிங்களவன்
தந்ததை தானம் என எண்ணி
தன் பசி தீர்த்தாயோ.......?
உண்டது உடலில்
உதிரமாய் உள்ளே
ஊற்றெடுக்கும் முன்னே
உடலை துளைத்து
உன் உதிரம் பெருக்கேடுத்ததே
ஐயம் கொண்ட காடையர்கள்
ஐந்து துளை போட்டார்களோ
ஜெயம் மட்டும் உள்ள உன் மார்பில்
ஜனன வலி தெரியாத மடையர்கள்
மரணம் உன் உடலுக்குத்தான் உனக்கல்ல
மண்ணில் சாய்ந்ததாக வீரம் பேசினார்களோ ..?
மறுபடியும் இடி அவர்கள் மேல் பார்த்தாயா
மறக்காதே பாலா நீ இறந்தும் உன்னோடு
எம் தமிழ் உயிர் வாழ்கிறது
பாலாவா.....? பலியானது .......?
பாவிகளின் எண்ணம்