அம்மா...
அம்மா...
நான் ஊர் சுற்றிப் பார்க்க...
என்னைச் சுமந்தபடி
நீ நடந்தாய்....!
நான் நடந்தபோது
விழுந்துவிடுவேனோ என்று
நீ பயந்தாய்....!!
எனக்குக் காய்ச்சல் வந்தால்
இரவெல்லாம்
நீ கண்விழித்தாய்....!
எனக்குக் காயம்பட்டால்
நான் அழும் முன்
நீ அழுதாய்....!!
எனக்காக
மீண்டும் ஒருமுறை
அ...ஆ...
ஆத்திச்சூடி....
1...2...3...
எல்லாம் படித்தாய்....!
எனக்கு பசித்தபோது மட்டும்
ஒரு முறையேனும்...
ஒரு துளியேனும்...
நீ ஏன்.....சாப்பிட்டதில்லை..?
இன்னும்
பசியாறாமல்
உன் நினைவில் நான்...!!
சுப.முருகானந்தம்.