சுப.முருகானந்தம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுப.முருகானந்தம்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  18-Dec-1960
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Dec-2010
பார்த்தவர்கள்:  295
புள்ளி:  55

என்னைப் பற்றி...

சிறு வயது முதல் தமிழின் மீதும்,தமிழினம் மீதும் கொண்ட பற்றுதலால் எழுதுபவன்

என் படைப்புகள்
சுப.முருகானந்தம் செய்திகள்
சுப.முருகானந்தம் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2014 10:24 am

இப்போதெல்லாம்...
நம் விழிகள்
‘பொதுப் பார்வை’ பார்க்க
பழகி விட்டன......
நம்
முகத்தில் விழுந்திருக்கு,ம்
சுருக்கங்களும்
முடியில் கலந்திருக்கும்
வர்ணங்களும்
நாம் கடந்து வந்துள்ள
தூரத்தையும்
காலத்தையும்
சொல்லத்தான் செய்கின்றன.....
ஆனாலும்
நடந்துவிட்ட நிகழ்வுகளுக்கு
காரணம்
“நீயா...? இல்லை... நான் தானா.....?”
என்ற கேள்வி மட்டும்
அப்போது போலவே
இப்போதும்
நெஞ்சில் முள்ளாய்.....துளைக்கிறதே.....!
இது தான் காதலா....! ?

மேலும்

சுப.முருகானந்தம் - காளியப்பன் எசேக்கியல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2014 8:58 am

சாட்சியாய் வாழ்வோம் கண்ணே!
-- ஆறுசீர் விருத்தம்---எ.கா
காதலைச் சொல்ல வந்தால்
கண்களி ரண்டே போதும்!
ஏதுமே குறையு தென்றால்
இதழ்களி ரண்டே போதும்!
மோதலின் பயமும் வந்தால்
முன்,அணை கைகள் போதும்!
சாதனை செய்வோம் வா!நாம்
சாட்சியாய் வாழ்வோம் கண்ணே!
=====

மேலும்

சாட்சியாய் வாழ்வோம் கண்ணே! ===== நன்றி அய்யா மாமணியே! 03-Feb-2014 1:03 pm
வாலிபம் இருக்கிறது இன்னும் உன்னிடத்திலும்! வரவுக்கு நன்றி விவேக் பாரதி! 16-Jan-2014 7:11 pm
மோதலின் பயமும் வந்தால் முன்,அணை கைகள் போதும்! சாதனை செய்வோம் வா!நாம் சாட்சியாய் வாழ்வோம் கண்ணே! கிள்ளும் வரிகள் அய்யா அள்ளுது வாலிப நெஞ்சத்தை ! 16-Jan-2014 11:09 am
அருமை . அருமை . 16-Jan-2014 10:05 am
சுப.முருகானந்தம் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2014 7:53 pm

​தை தையென தைமகள் பிறக்கிறாள் ​
தமிழர்க்கு மகிழ்வை அள்ளித் தருவாள் !

தரணி எங்கும் நிறைந்துள்ள தமிழரை
பரணி பாட வைத்திடும் தைமகள் !

தமிழர் இல்லந்தோறும் இன்பம் பொங்கவே
ஒளியேற்ற வந்திடும் தைத்திங்கள் முதல்நாள் !

ஏர்பூட்டி உழுதிடும் உழவனின் உள்ளத்தை
சீராட்டி களிப்பூட்டும் பொங்கல் திருநாள் !

அன்னம் அளித்திட்ட வயல்வெளியை
அன்றாவது ஒருநாள் வணங்கும் நாள் !

உழவனுக்கு உழுதிட உதவிட்ட கால்நடையை
தொழுது போற்றி வணங்கிடும் உன்னத நாள் !

தரணியில் தமிழர்க்கு வாழ்வில் ஓர் திருநாள்
தமிழர்கள் மகிழ்ந்திடும் நிகரில்லா நன்னாள் !

அனைவருக்கும் என் இனிய பொங்கல்
நல்வாழ்த

மேலும்

அருமை அய்யா. தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்... 16-Jan-2014 2:04 pm
*** மகிழ்ச்சி . *** நன்றிகள் நட்பே . 15-Jan-2014 10:31 pm
அருமை 15-Jan-2014 10:18 pm
மிக நன்றி ஜெயராஜா 13-Jan-2014 2:04 pm
சுப.முருகானந்தம் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2014 10:10 pm

இல்லாதது தொழுது இருந்ததெல்லாம் இழந்து
கல்லார் கற்றோரே னும் கணக்கும் முற்றொழிந்து
பல்புனைக் கதைகள் பயனிலாச் சாத்திரங்கள்
நல்லெனப் போற்றி நலிந்த நற்றமிழர்

உழைப்பில் மகிழ்ந்து உண்மையை நாடி
உறவினை அணைத்து உரிமைக்காய் போராடி
தனக்கென்றோர் கலை இலக்கியம் பண்பாடு
உண்டென்று உரைக்க வந்த ஒரே திருநாள் ..!

தை முதல்நாள் தமிழர்க்குப் புத்தாண்டு
தமிழர் இல்லமெலாம் பொங்கட்டும் மகிழ்ச்சி ...!
திராவிடர் திருநாளின்று பகுத்தறிவோடும் இனவுணர்வோடும்
தமிழர் உள்ளமெலாம் பொங்கட்டும் எழுச்சி ...!!

மேலும்

சுப.முருகானந்தம் - வா. நேரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2013 1:36 pm

ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும் , இன்னொரு பக்கம் ஆத்திரமாக வந்தது. இப்படிப் படித்த முட்டாள்களாக , அறிவிலிகளாக இருக்கின்றார்களே என்னும் வருத்தமும் வந்தது. கீதா, இன்று நேற்றல்ல, 20 ,25 வ்ருடங்களாக நட்பு ரீதியாகப் பழகியவர். பல நேரங்களில் உதவியாக இருந்தவர் என்றாலும் அவர் செய்த செயலை மாறனால் தாங்க முடியவில்லை. நேரே அவளின் இருக்கைக்கு சென்ற மாறன், அவளிடம் ' உங்கள் பிரார்த்தனையால் தலையில் இருக்கும் ஒரு முடியை கீழே விழ் வைக்க முடியுமா ? ' என்றான். என்ன சொல்கிறான் இவன் என்று புரியாமல் இவனைப் பார்த்த அவளிடம் ," பிரார்த்தனையால் எல்லாம் முடியும் என்று சொல்கின்றீர்களே , அதற்கென்று ஒரு கூட்டத்தை மேய்த்

மேலும்

மத உரிமை என்பது , வழிபாடு என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ஆத்திகனாக இருப்பவன், நாத்திகனாக மாறலாம், நாத்திகனாக இருப்பவன் ஆத்திகனாக மாறலாம், அது ஒவ்வொருவனின் மனதைப் பொறுத்தது.அறிவு வயப்பட்டவன் எவனும் நாத்திகனாகத்தான் இருக்க முடியும்... . நல்ல வரிகள், உண்மையும் கூட . நான் இந்த வகையை சார்ந்தவனே .. ஆனால் என்றுமே நான் எந்த ஒரு மத சார்புள்ளவனையோ , ஆத்திகனையோ மனம் வருந்தும்படி சொல்வதும் இல்லை பேசுவதும் இல்லை. என் குணம் அந்த மாதிரி . பெருமைக்காக சொல்லவில்லை. நான் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு மனிதனாகவே வாழ விரும்புகிறேன் .. இன்றும் அப்படித்தான் .. நண்பர் நேரு அவர்கள் , கற்பனையோ , கதையோ , உண்மை நிகழ்வோ எனக்கு தெரியாது ... ஒரு நல்ல , உயர்ந்த கருத்தை அழகாக எடுத்து சொல்லியுள்ள விதம் அருமை. இதற்காக எழுந்த கருத்து மோதலும் , அவரவர் எண்ண வெளிப்பாடுகளும் நன்று. அவரவர் கோணத்தில் , மன நிலையில் அது சரியாகவும் இருக்கும். என்றும் மனித நேயமே வெல்லும், அதுதான் தேவை மனிதனுக்கு என்று நோக்கில் நேரு அவர்கள் முடித்திருப்பது பாராட்டுக்குரியது . எதிர் கருத்துள்ள மாறன் உதவிக்கு ஓடி வருவதும் , கீதா அந்த நேரத்தில் அனைத்தையும் மறந்து அவரை உதவிக்கு அழைப்பதும் தான் உண்மை மனித உள்ளங்கள் . அதுமட்டுமல்ல , கீதா , ஜெபம் செய்யாலாம் என்ற தன தோழியை அறிவுருத்துவதும் அருமை , நட்பின் ஆழத்தை , அந்த நேரத்தின் உண்மை நிலையை உணர்ந்த உன்னத உள்ளம். உண்மை மனிதர் . கீதாவை உள்ளன்போடு வாழ்த்துகிறேன் ... நேருவின் கதையும் , நல்ல நோக்கத்தையும் , அதனால் எழுந்த கருத்துக்களை பரிமாறிகொண்ட அனைவரையும் வாழ்த்துகிறேன் . மாறன் , கீதா இருவருமே நல்ல கதாபாத்திரங்கள் . ஆனால் உண்மை வாழ்விலும் அதுபோல இன்னும் பலர் வாழ்கின்றார்கள் . அவர்களுக்கு என் வணக்கங்கள் . நன்றிகள் . 07-Jan-2014 7:46 am
ம்ம்கும் 06-Jan-2014 1:52 am
ஒரு மனிதன் மற்ற மனிதனிக் குறை கூறுகிறான் என்றால் அவன் தன்னையே புரிந்து கொள்ளாமல் அவனைத்தானே குறை சொல்கிறான்/@sahanadhas/அய்யா, மனித சமுதாயத்தில் இதுவரை கடைப்பிடித்து வந்த வழிமுறைகள் சரியா தவறா என்று ஆராய்வதே தவறு என்பது அறிவார்ந்த செயலாகுமா ? என்று எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். கால காலமாக , இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிக் கொண்டு நம் சக மனிதர்கள் படும் துன்பத்தையும் வேதனையையும் கண்டும் காணமல் போவதுதான் படைப்பாளிகளுக்கு அழகா? குப்பை , அசுத்தம், நோய்கிருமிகள்,எல்லா இடங்களிலும்தான் இருக்கும் .அதைக் குப்பை ,அசுத்தம், என்று பார்ப்பவர்கள் நிச்சயமாக குப்பையகவும் அசுத்தமாகவும் தான் இருப்பார்கள் என்று சொல்வது போல் உள்ளது உங்கள் கருத்து. மனித சக்தியை விரயமாக்கத எந்த வாழ்வியலையும் சொல்லுங்கள் மனதார ஏற்று நடக்க அணியமா இருக்கிறோம். வா.நேரு அய்யா அவர்களுக்கு தொடர்ந்து சொல்லுங்கள் ...தொய்வின்றி செல்லுங்கள் பாராட்டுக்கள் மனிதநேயம் வெல்லட்டும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 01-Jan-2014 11:29 am
உண்மையாக ஏசு கிறிஸ்துவைப் பின் பற்றுபவர்களை நீங்கள் பார்க்கவில்லையா ? எவன் ஒருவன் எல்லா மதத்தினையும் நேசிக்கிறானோ எவனொருவன் எல்லா மாந்தர்களையும் நேசிக்கிறானோ அவனே உண்மை மனிதன் அவன் தான் முழு மனிதன் என்பது உயர்ந்த மகான்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை ,ஏதோ ஒரு சிலர் இவ்வாறு செய்து விட்டனர் என்பதற்காக ஒரு ஒட்டுமொத்த மதத்தை யாரும் குறை கூறுவது இல்லை ,தவறு என்று பார்த்தால் எல்லா இடங்களிலும் தவறு உண்டு தவறு செய்வதினாலே தான் அவன் மனிதன் இல்லாவிட்டால் அவன் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுவான் உண்மையான கிறிஸ்தவம் நீங்கள் சொல்லும் கருத்தைப் போதிக்க வில்லை .கிறிஸ்தவம் என்பது மதம் என்று அனேகர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அது மதம் அல்ல ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் வகுக்கப் பட்ட கோட்பாடுகள் அந்த கோட்பாடுகளைப் பின் பற்றுகிறவர்களே கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள் கிறிஸ்தவன் என்பது கிறிஸ்து +அவன் ,கிறிஸ்து அவனாகவும் அவளாகவும் மாற வேண்டும் ஏசு கிறிஸ்து தன வாழ்வில் போதனை மட்டும் செய்யாமல் வாழ்ந்த காட்டினார் .ஆனால் இன்று பல பேர் அதை செய்ய வில்லை அது மனிதனின் தவறு தானே ஒழிய மதத்தின் தவறு அல்ல ,நீங்கள் சொல்லும் கூற்றுப் படி பார்த்தால் எத்தனையோ கோயில்களிலும் ஆலயங்களிலும் கடவுள் எனக்கு சுகம் தருவார் என்று கைத் தொழுபவர்கள் தவறு செய்வதாகத் தோன்றுகிறதே ? ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள் அந்த வார்த்தை பொய் போல் அல்லவா தோன்றுகிறது எல்லா வினைக்கும் எதிர் வினை ஒன்று உண்டு என்ற நியூட்டனின் கூற்றுப் படிப் பார்த்தால் கூட மனிதன் புனிதன் என்று இருவர் உண்டே ஒருவன் புனிதனாக வாழ வேண்டாம் மனிதனாக வாழலாமே ஏதோ ஒன்ரிடண்டு பேர் இவாறு இருக்கிறார்கள் என்று சொல்லி அனைவரையும் குறை சொல்வது என்பது ஒரு பண்பட்ட மனிதன் செய்யும் செயல் அல்லவென்று தோன்றுகிறது அப்படியென்றால் அன்னை தெரசா தொழு நோயாளிகளுக்குச் செய்தவைகளை என்னவென்று கூறுவது? இருக்கட்டும் செய்தித் தாளில் கலக்கிக் கொண்டிருக்கும் செய்தி நடிகை ரஞ்சிதா சந்நியாசியானது இதை என்னவென்று சொல்வது நான் உங்கள் படைப்பை தவறு என்றோ சரி என்றோ கூற வர வில்லை ஒரு ஒட்டு மொத்த சமுதாயத்தையோ மதத்தையோ வம்புக்கு இழுப்பது ஒரு நல்ல படைப்பாளி செய்ய மாட்டார் என்பது என் கருத்து நான் வேற்று மதத்தைச் சார்ந்தவர் ஆனாலும் ஸ்ரீ பத்மநாப சாமி கோயிலில் சென்று வழி பட்டேன் ஏன் அவ்வாறு செய்தேன் ?எல்லா நதிகளும் கடலில் சங்கமிப்பது போல எல்லா மதங்களும் கடவுள் எனப்படும் பரமாத்மாவிடமே சென்றடைகின்றன இது தான் சான்றோர்கள் வலியுறுத்தும் கருத்து .நான் சாமி கும்பிட்டதை ஒரு படைப்பாக சாமி தரிசனம் என்ற தலைப்பில் எழுதியிருப்பேன் என் கருத்துப் படி ஒரு மனிதன் மற்ற மனிதனிக் குறை கூறுகிறான் என்றால் அவன் தன்னையே புரிந்து கொள்ளாமல் அவனைத்தானே குறை சொல்கிறான் என்றே கூறுவேன் நான் சொல்வது ஒன்று தான் நீங்கள் இதுவரை உண்மைக் கிறிஸ்தவனைச் சந்திக்க வில்லையென்றே கூறுவேன் மனிதன் செய்த தவறுக்காக உண்மையாய் வாழ்ந்த கிறிஸ்துவை இழுக்க வேண்டாமே மதம் என்பது ஒரு மனிதனை நல்வழிப் படுத்துவதற்குத் தானே ஒழிய வம்புகள் வளர்க்க அல்ல உங்கள் கருத்து உண்மையாக கிறிஸ்துவ பாதையில் நடக்காதவர்கள் யோசிக்க வேண்டிய விஷயமே ஆனால் ஒரு நல்ல படைப்பாளி இதுபோல் ஒரு தலைப்பை அணுகும் முறையே வேறு மாதிரி இருக்கும் ஒரு படைப்பாளி தன படைப்பில் எதிர் மறையான கருத்துக்கள் கூறுவது நல்லதல் என்று நினைக்கிறேன் நன்றி தோழமையே ! வாழ்க வளமுடன் ! ................இதைப் படித்து நன்றாக யோசியுங்கள் இப்படிப் பட்டக் கருத்துக்கள் எங்கிருந்து வரும் யார் மனதிலிருந்து வரும் என்று நன்றி 29-Dec-2013 12:01 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
புதுவை தமிழ்

புதுவை தமிழ்

புதுச்சேரி
Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா
user photo

senbagam

poongunam

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
user photo

senbagam

poongunam
Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா

இவரை பின்தொடர்பவர்கள் (4)

user photo

senbagam

poongunam
Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா
புதுவை தமிழ்

புதுவை தமிழ்

புதுச்சேரி
மேலே