தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
தை தையென தைமகள் பிறக்கிறாள்
தமிழர்க்கு மகிழ்வை அள்ளித் தருவாள் !
தரணி எங்கும் நிறைந்துள்ள தமிழரை
பரணி பாட வைத்திடும் தைமகள் !
தமிழர் இல்லந்தோறும் இன்பம் பொங்கவே
ஒளியேற்ற வந்திடும் தைத்திங்கள் முதல்நாள் !
ஏர்பூட்டி உழுதிடும் உழவனின் உள்ளத்தை
சீராட்டி களிப்பூட்டும் பொங்கல் திருநாள் !
அன்னம் அளித்திட்ட வயல்வெளியை
அன்றாவது ஒருநாள் வணங்கும் நாள் !
உழவனுக்கு உழுதிட உதவிட்ட கால்நடையை
தொழுது போற்றி வணங்கிடும் உன்னத நாள் !
தரணியில் தமிழர்க்கு வாழ்வில் ஓர் திருநாள்
தமிழர்கள் மகிழ்ந்திடும் நிகரில்லா நன்னாள் !
அனைவருக்கும் என் இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்
பழனி குமார்