காதலர் தினத்தில்

இப்போதெல்லாம்...
நம் விழிகள்
‘பொதுப் பார்வை’ பார்க்க
பழகி விட்டன......
நம்
முகத்தில் விழுந்திருக்கு,ம்
சுருக்கங்களும்
முடியில் கலந்திருக்கும்
வர்ணங்களும்
நாம் கடந்து வந்துள்ள
தூரத்தையும்
காலத்தையும்
சொல்லத்தான் செய்கின்றன.....
ஆனாலும்
நடந்துவிட்ட நிகழ்வுகளுக்கு
காரணம்
“நீயா...? இல்லை... நான் தானா.....?”
என்ற கேள்வி மட்டும்
அப்போது போலவே
இப்போதும்
நெஞ்சில் முள்ளாய்.....துளைக்கிறதே.....!
இது தான் காதலா....! ?

எழுதியவர் : சுப.முருகானந்தம் (14-Feb-14, 10:24 am)
Tanglish : kathalar thinathil
பார்வை : 113

மேலே