கவி அரசன் அவர்களின் விடுகைக்கான பதில் எழுத்து தளத்தில்.....
கவி அரசன் அவர்களுக்கு
மன்னிப்பு என்ற பெயரில் தாங்கள் அனுப்பிய விடுகையை தளத்திலேயே பகிர்ந்திருக்கலாம்..
பரவாயில்லை
ஆனால் தங்கள் விடுகைக்கான பதிலை தளத்தில் பகிர்வதே சரி என்பதால் இங்கே பதில் தருகிறேன்.
முகநூலில் என் கவிதை பெயரில்லாமல் திரிந்தது என கூறியது நகைப்பை தருகிறது.எழுதியவர் facebook என எழுத முடியாது என சொல்லும் தாங்கள் , அப்படியென்றால் எழுதியவர் யாரோ என குறிப்பிட்டிருக்கலாமே....அல்லது பின்குறிப்பில் இந்த கவிதை முகநூலில் கண்டேன் என்றாவது எழுதியிருக்கலாம் . அன்றியும் கவிதை தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் யாதோ?? எழுதியவர் என்ற இடத்தில் தங்கள் பெயரை சேர்த்தது ஏன்? அது தவறென்று தங்களுக்கு தோன்றவில்லையா??
மன்னிப்பு என்ற தலைப்பிட்டு விடுகை எனக்கு அனுப்புவதை விட அதை தளத்தில் வெளியிடுவதே சரி என நினைக்கிறேன்.ஏனெனில் தங்களின் இச்செயல் அறியாமல் செய்தது என்றாலும் இதனால் எழுத்து தள நண்பர்கள் பலர் மன வேதனை அடைந்துள்ளனர்
உங்கள் கவிதை பலவற்றை முகநூலில் இருந்து எடுத்து தங்கள் பெயரில் பலர் பதிவு செய்வதாகவும்அதை தாங்கள் வழியின்றி சந்தோஷமாக ஏற்பதாக கூறியுள்ளீர்கள்.அப்படி பதிவு செய்வது என் பார்வையில் திருட்டு என்று எழுதியிருத்தீர்கள்.மன்னிக்கவும் அனைவரது பார்வையிலும் அது திருட்டு தான் வேண்டுமானால் உங்கள் பார்வை தவிர.....
அவர்கள் செய்யும் தவறை சுட்டும் நீங்களே அதை செய்திருப்பது வியப்பை அளிக்கிறது.வயதில் மூத்த தங்களுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
எழுத்து பணியும் இன்ன பிற பணியும் உள்ள நமக்கு இது பற்றி இனி விவாதம் வேண்டாம் .
தெரியாமல் செய்த தவறு என்றே கொண்டாலும் அந்த தவறை தளத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு அந்த படைப்பை தளத்தில் இருந்து நீக்குவதே தாங்கள் எழுத்து தளத்திற்கு தரும் மரியாதை என்று கருதுகிறேன். மேலும் தாங்கள் குற்றமற்றவர் என நிரூபிக்க அது ஒன்றே வழி என்பது என் கருத்து.
முடிவு உங்கள் கையில்..