இரவை அவிழ்....
இந்த இரவையாவது
இறவாமல் தா,
ஒவ்வொரு இரவையும்
இரவல் கேட்காதே,
எனக்கென்று இந்த
இரவாவது இறவாமல்
இருக்கட்டும்,
இரவின் பிடியில்
இருக்கிறேன்
கட்டிவைத்திருக்கும்
கயிற்றை விடு,
இரவை நான்
கட்டுகிறேன்,
என்னுடன் தூங்கட்டும்
இந்த இரவு,
வெளிச்சமாய்
தொட்டுவிடாதே
இரவு விழித்து
கொள்ளும்,