மனக்குவளை,,,,

மனக்குவளை,,,,

கொல்லும்
வார்த்தைகளின்
இருப்பிடம்
இதயம் என்றால்
உயிருள்ள
உணர்வுகளின்
இருப்பிடம்தான் எது,,,

காய்ந்த
சாம்பல்களில்
தேடிய
எலும்புகளிலே
எழுதப்பட்ட
காவியங்கள்
பேசப்படும்
நாள் என்று வருமோ ???

இருக்கும்
இடத்தில்
கனவுகளோடு
பயணிக்கும்
நிலைதான்
எதுவரை என்றும்
சொல்லல் தகுமோ ??

இரவுகளும்
பகல்களும்
மாறி மாறி
கடந்தாலும்
விழியுறக்கங்கள்
இழந்து
நாட்களை
கிழமைகளை
நினைவில்
கொள்ளாத
சாபமேனோ
இன்னும் தெரியவில்லை

கூட்டமாய்
பறந்திரைத்தேடிய
வண்ணத்துப்பட்சிகள்
காற்றலையிலே
சிக்கி சிறகுகள்
சிதிலம் கொண்டு
சேருமிடமறியாது
துடிக்கும் நிலைதனை
கண்டு தவிப்பார்கள்
யாரோ மனமே???

இருப்புக்கொள்ளாத
மனம்
இங்கு ஏனோ
நினைத்து ஏங்குகிறது
தாய்மைகளை
சேய்மைகளை
இழந்துவிட்ட
இடமறியாது,,,

வாய் விட்டு
அழுதுவிடவும்
சுதந்திரமில்லாத
பகைமை இருட்டில்
பறந்து தவித்து
செவுற்றிலே
தன்னை தானே
மோதிக்கொண்டு
உயிரிழக்கும்
விட்டில் பூச்சிகளின்
பரிதாப வாழ்க்கை,,,

கொட்டிக்கிடக்கும்
இரகசியங்களை
பொக்கிஷங்களாய்
பத்திரப்படுத்தி
பூட்டிக்கிடக்கும்
ஆழ்மனம் என்னும்
அம்மானுஷ்ய இருட்டறை
பிணவாசங்களில்லாத
சவக் கிடங்குகளே
நெட்டித்தெழுப்பும்
கண்கள் சொருகும்
வினாடிகள் தோரும்
மனப் பேய்களாய்,,

மாற்று
வழிகளிருந்தும்
மருந்தினைத்
தேடி அலையும்
வினோத
வேடிக்கைக்
கண்காட்சிகள்
நிறைந்த
நீர்நிலப் பந்து,,,

இதில் மனிதன்
உட்பட அனைத்தும்
மருந்துகளின் வசமானது

மாற்றுவார் யாரோ மனமே

அனுசரன்,,,

எழுதியவர் : அனுசரன் (25-Feb-13, 3:12 am)
பார்வை : 122

மேலே