உயிருடல்
ஓங்கும்போலம்மையாய் ஒடுங்கும்போலப்பனாய்
ஆங்கவியாமல் அவருருவர்,
பாங்கான இசையின் ஈனம் போல.
அம்மை யப்பனை அகல்வதில் லொருபொழுதும்
பொழுதென்ப அம்மயிலப்பன் பன்மையாய்ப்
பொருள் வினை யுருவதே.
பன்மையின் னின்மை பன்மையறியாதே
பன்மையின் ஒன்மையாய் யவராங்கிருப்பினும்,
பன்மையோ உழலும் தன்வினை தந்த
அங்கும் பின் இங்கும் போக்கும் வரவுமாய்.
அம்மையவளானாள் வையகத் தின்னுடல்
அப்பனவனானான் அதனுயிர் சோதியும்
அவர்தம் ஈர்ப்பம் விசையாய் புலனாய்
மிகவில் அவையே யொடுங்கு மொளியாய்.
புலனுருவுருவின் அந்தக்கரணம்
ஆணவம் பெருக்கும் உயிரை உருத்தும்,
அவனவன் அரனெனும் நிறையினின் றகற்றும்.
நிறையினின் றகலினும் அவனவள் காந்தம்
பசாசத்தை யொருக்கும் பொறியினின் றகற்றும்.
புலன்வழி அவரினை அறிந்தில் லொருவரும்
புலன்பொறிகட் கவரில்லா துளரே,
புலன்பொறிகட்கும் அப்புற மிருப்பர்
அம்மையும் அப்பனும் நற்திருகுருவாய்.
சத்தவர் அசத்தின் கதியினினப்புறம்
அசத்தோ யிப்புற மறியா சத்தினை
சத்தசத்தாயுள னறிவா னிருகதி
பதியினின் றகற்றிய பசுபாச பொறிவிதி.
ஐம்புல பொறியினுள் சிக்குண்ட கதியோனின்
ஐயமகற்ற அவரே வல்லோராம்
ஐயமகன்றிட வந்நிய மற்றிடும்
ஐயமகன்றிடும் தவப்பய னூக்கினால்.
ஐயமகன்றிட நுண் புலன் கூடிடும்
அகக்கண் காணும் கசடற்ற் சோதி
அகச்செவி கேட்க்கு மின்னுயிர் நாதம்
ஊனுடல் மாறும் உயிருடலாகவே.