தமிழனே எழுந்திடு !!!!!
காலத்தின் மோதல் என்பேன் அவனிலை எண்ணுகையில்
வார்தையொன்று போதாது அவன் லீலை உரைப்பதற்கு
வானத்தில் கூடியிருக்கும் மேகமாய் வேறொருவன்
கால் பதியும் புவியினில் சிதறியிருக்கும் மண்ணாய் இவனிலை
ஏனென்று கேட்பதற்கு வார்த்தையில்லை
அய்யகோ! உள்ளம் குமுறுதே அதனை நித்தம் நினைக்கையிலே
கோபுரத்திலிருக்கும் கள்வனை வணங்குவோர் நிறைய
இம்மண்ணிலே
நல் உள்ளம் படைத்தோர் உண்டோ மானிடா
புயலாய் தான் எழுந்திடு புத்துயிர் கொண்டிடுவாய் தமிழனே
விதியை நோக்கி வேகமாய் விரைந்திடுவாயே
வீரம் விளைஞ்ச நெஞ்சோடு அழித்திடுவாய் கள்வனையே
காலத்தை மதியால் வென்று கீர்த்தியை உயர்த்திடுவாய்
மார்தட்டி துணிவோடு நிமிர்ந்திடுவாய் இளந்தமிழன் நீயன்றோ!

