கனிந்தது காலம்!
நினைவுகளுக்கு
சக்தி உண்டு
கனவுகளுக்கும்
மகிமை உண்டு
அழும்போது
அருகில் இருந்தாய்
விழும்போது
தூக்கிவிட்டாய்
சிரிக்கும் போது
சேர்ந்து சிரிக்க
சிறகுகள் கொடு
நண்பனே..
பறந்து வருகிறேன்
பாதி இன்பம் உனக்கு
மீதி இன்பம் எனக்கு
மீண்டும் நான்
குழந்தையானேன்
உந்தன் அன்பிலே.