ஏக்கம்!!!
இதயக்கதவுகள் திறக்கவில்லை
இருவரும் ஒன்றாக இணையவில்லை
உதயக்கதிரும் சிரிக்கவில்லை
உள்ளங்கள் இரண்டும் மகிழவில்லை
விடியும் இரவுகள் முடியவில்லை
விழிகளில் நீரும் குறையவில்லை
நொடியும் நோயும் தீரவில்லை
நீயும் நானும் சேரவில்லை
கூடிடும் காலங்கள் மலருமா
கும்பிடும் தெய்வங்கள் கேட்குமா
வாடிய மனமும் நிமிருமா
வாழ்த்திட நெஞ்சமும் மகிழுமா
வெறுமை குறைந்து போகுமா
வேதனை நேரங்கள் ஓடுமா
வறுமை நிலையும் மாறுமா
வாழ்வினில் தென்றல் வீசுமா