ஆயுதம் அன்றி அடுத்தொன்று உள்ளதோ !!!!!!

"சாந்தியே வடிவெனச்
சார்ந்ததோர் மானுடன்
காந்தியே எனப்பெயர்
காட்டி இப்பாரிடைப்
போந்தனன் ; அவனுடைப்
போதனை இந்நில
மாந்தர் மனத்திடை
மண்ணுதல் வேண்டுமே !!

சத்தியம் அவனது
சாத்திரம் ;அதனைநாம்
நித்தியம் கைக்கொள
நிம்மதி நாடுமால்
எத்தனை இடரது
எதிர்ப்பட்டாலும் இச்
சத்தியப் பாதையை
சற்றும் விளக்கிடோம் .

ஆயுதம் ஒன்றினை
அவனும் பற்றினான் .
ஆய பேர் அன்பெனும்
அஹிம்சைதான் அது .
பேய் மனத்தானையும்
பெருமகனாக்கிடும்
ஆயுதம் -அன்றி
அடுத்தொன்று உள்ளதோ ????????

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Feb-13, 12:43 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 91

மேலே