காதலியே வா
நிறமில்லா புரவி தனில்
நித்தம் நித்தம் ஏற்றம்கொண்ட
உன் நெஞ்சத்து மொழி
உணர்ந்து அதை முகர்ந்து
சுவாசித்தே வாழ்வேன்-நான்
அண்டமெல்லாம் இருண்ட போதும்
உன் மெய்விழி சுடரினிலே
படரும் ஒளியினிலே வாழ்வை
தெளிவுபட காண்பேன்-நான்
உன்னினைவே கேடயமாய் எனக்கிருக்க
எதிரிகள் வெட்டினால் கிளைத்தெழுவேன்
துரோகிகள் புதைத்தால் முளைத்தெழுவேன்
ஆதவனின் வெப்பத்தில் ஆவியாக
புல் நுனியில் இளைப்பாறும்
பனித்துளி இல்லை-நான்
சுட்டெரிக்கும் சூரியனெ இலக்கென்று
அதை நோக்கி பறந்து
செல்லும் பினிக்ஸ் பறவை-நான்
உயிர் உன்னிடம் இருக்க
வெறும் மெய் கொண்டு
எங்கு சென்று என்னவென்று
நானும் வாழ?
ஆயுள் முழுவதும் அச்சத்தில்
வாழ்வதை காட்டிலும் ஒருமுறை
கைகோர்த்து அச்சத்தை எதிர்த்து
நம் பலம் கொண்டு
முயற்ச்சித்து பார்த்திடலாம் வா
வாழ்வதாய் இருப்பினும் காதலில்
மடிவதாய் இருப்பினும் காதலில்
எதுவாய் இருப்பினும் நாம்
ஒன்றாய் கலந்திடலாம் வா

