நேரம்
சரியில்லாத நேரம்
நாம் முயற்சி இன்றி
சோம்பித்திரியும் நேரம்
இராகு காலம்
நாம் தீஞ்ச்சொற்களை
உபயோகித்து நம்மைச்சுற்றி
பகைமை பாராட்டும் காலம்
எமகண்டம்
நம் தீமையான
எண்ணங்களை செயல்படுத்த
முற்படும் நேரம்
நல்ல நேரம்
நாம் நற்சிந்தனை
நன்முயற்சி நற்சொற்கள்
நற்செயல்கள் புரியும் நேரம்