உனக்கு கருமாதி படைக்கும் உன் காதல்
தத்தி தாவுது மனசு
தண்டனை கேக்குது வயசு
தவிப்பின் உச்சம் நீ
தண்ணீர் குடித்தும் மிச்சம் தவிப்பு
தயங்காமல் கேட்டுவிடு
என்ன வேண்டுமோ சொல்லிவிடு
இவ்வுலகம் அனைத்தும் உன்னதே
உன்னை தவிர மற்றது மறக்குதே
ரசிக்கிறாய் சிரிக்கிறாய்
மயங்கிறாய் மடிகிறாய்
இது தான் காதலா
அவளே தான் காதலா
சொல்லுதோ சொல்லுதோ
காதலுனு சொல்லுதோ
கேட்குதோ கேட்குதோ
தண்டனைய கேட்குதோ
தவிக்குதா தவிக்குதோ
காதலுனு தவிக்குதோ
வேண்டுமா இந்த காதல் உன்னை
வெட்டியாக்கும் அந்த காதல்
நிச்சல் அடித்தும் நீந்த மாட்டாய்
உயிர் இருந்தும் வாழ மாட்டாய்
இன்றைய காதல் காவியம் படைக்காதடா
உன் காதல் உனக்கு கருமாதி
படைக்குமடா
உனக்காக கடைமை காத்திருக்கு
கடைசி வரை கடைமை நேசி
காதலில் முழ்கி உலகத்தை
மறக்காதே
முட்டி மோதி வெளியே வா
உலகம் விடிந்திருக்கு
உன் வெற்றியை காண
காத்திருக்கு