வரிசை

கண்ணு குமாரு இன்னைக்கு ரேஷன்"ல மண்ணென்ன தராங்கலாம் வாங்கிட்டு வந்துடுப்பா ஈர விறகை அடுப்பில் எரிய விட்டுக்கொண்டு அந்த புகையுடன் சொன்னால் ராக்காயி....

தலை வாரி கொண்டு இருந்த குமாரு ,அம்மா என்னால அங்க வரிசைல 2 மணி நேரம் நிண்ணு வாங்கிட்டு வரமுடியாது எனக்கு வேலை இருக்கு நீ போய்ட்டு வந்துடு ...

கண்ணு உடம்பு முடியலடா ..இல்லனா நான் போகமட்டனா ?

என்னால முடியாது அம்மா ..வெளிய முக்கியமான வேலை இருக்கு .நான் போய்ட்டு வரேன் ..

கண்ணு ஈர விறகு எறியாம புகை அடிச்சி நெஞ்சு வலிக்குதுடா வாங்கி கொடுத்துட்டு போடா ...

அதை காதிலே வாங்காமல் வெளியே காத்துகொண்டு இருந்த நண்பனுடன் சென்றான் ..

மாப்பிள்ளை நேரம் இருக்கா?இன்னைக்கு பார்த்துடலாமா?

இருக்குடா..

மாப்பிளை தலைவர் படம் ரீலிஸ் ஆகுறப்ப முதல் ஷோ வரிசைல கால் கடுக்க நிண்ணு படத்த பார்த்தா தான் நிம்மதி

எழுதியவர் : sjv (2-Mar-13, 11:32 pm)
சேர்த்தது : rajakiln
பார்வை : 242

மேலே