காதல் காத்திருப்பு
ஓடாத நதியில்
ஆடாத நிலா நீ
தூங்காத இரவின்
புரியாத வினா நீ
ஆடாத மலரில்
சந்தோஷ தேனீ நீ
அடந்த காட்டின்
மெல்லிசை நீ
மிரட்டும் அலையை
விரட்டும் தென்றல் நீ
துரத்தும் இருட்டின்
தூரத்து வெளிச்சம் நீ
என் இதயத்தின்
உயிர் துடிப்பு நீ
என் சுவாசத்தின்
பூங்காற்று நீ
என் வாழ்க்கையின்
விடிவெள்ளி நீ
என் உடலின்
பரிபூரணம் நீ
எல்லாமே நீ
என்றபோதும்
இன்றும் காத்திருக்கின்றேன்
உனக்காக

