நேரம்
அழகான காலை பொழுதை கூட ரசிக்காமல்,பேரூந்தை விட்டு விடுவோம் என எண்ணி ஓடும் நேரம் ...
பார்பவர்களிடம் வேலை என்று சொல்லி விரையும் நேரம் ...
தெரிந்தவர்களிடம் வேலைக்காக சிரித்து பேசும் நேரம் ..
பிறகு பேசலாம் என்று தொலைபேசி அணைக்கும் போது சிரிக்கிறோம் ...
நேரத்தை வென்று விட்டோம் என்று ...
உண்மையில் வென்றது நேரமே ...
முகம் தெரியாதவர்களுக்கு செலுத்தும் நேரத்தை சற்று உங்களை நேசிபவர்களுக்கும் தாருங்கள் ...