நீயே பெண்ணே ..!!!

எண்ணங்களில் விதைத்ததை
எழுத்துக்களில் பதிக்கும்
தருணம் இது
பூவில் மென்மையை
கண்டதுண்டு நாம் ஆனால்
அதன் உண்மையை
கண்டதுண்டா....?
காண்போம் பெண்மையில்
உன்னைப்பற்றி நான்
கண்டபடி எழுத நினைத்தாலும்
அது கவிதையாய் மாறும்
விந்தை என்னவோ
அதுதான் பெண்மையோ ...

ஒரு கருவறை மட்டுமல்ல
நூறாயிரம் கருவறைகளை
சுமப்பதால் என்னவோ
பாரதத்திற்கே தாயகிறாய்
உச்சி முதல் பாதம் வரை
வருடி செல்லும் தென்றல் நீயே!
உன்னை சீண்டி பார்க்கும் வேளையிலே
அதன் மறுதலையும் நீயே!
வஞ்சனை செய்யாது
வழங்கும் வான்மழை நீயே!
வெம்மை நிறைந்த
வறட்சியும் நீயே!
கண்கள் காணும்
காட்சியும் நீயே!
கைக்கு எட்டாத கானலும் நீயே!
அன்பெனும் ஆழ்கடல் நீயே!
அழகெனும் ஓவியம் நீயே!
மனம் திறந்து எழுதும்
கவிதை நீயே!
நான் கணம் கலங்கி
நிற்கும் கண்ணீரும் நீயே!
என் வரிகளில் என்றும்
முதலும் நீயே!
இனிய முடிவும் நீயே நீயே நீயே!!!!!!!




(பெண்மைக்கு சமர்ப்பணம்)

எழுதியவர் : (4-Mar-13, 6:08 pm)
பார்வை : 112

மேலே