சிலையோ!சிற்பமோ!

கவிதை ஒன்று எழுதினேன்...
காட்டிக் காட்டிக் கேட்கிறேன்.
கருத் தென்ன சொல்வாரென
காத்துக் கிடந்து தவிக்கிறேன்.
எவரிடம் கருத்துக் கேட்டேனோ
அவரும் கருத்துச் சொன்னார்...
"கருத்தைத் தேடுபவ னல்ல
கருத்தை விதைப்பவனே கவிஞன்"
கருத்து வடிக்கப் பட்டால்தான்
கவிதை யாகச் சொலிக்கும்.
நான் அதைச் செதுக்கியிருந்தால்
நாடத்தான் தேடி யிருப்பாரே...
எனது கவிதை வெறுஞ் சிலைதானோ!
இன்னும் அது சிற்பமாகவிலையோ!
சிற்பமானால் அவரோடு பேசியிருக்கும்...
அவரும் என்னோடு பேசியிருப்பார்...