காலம் மாறினும் தேகம் அழியினும் கதையில்கவிதையில் கலந்தே வாழுவோம்

புகுமுக வகுப்புதனில்
புதுமுகம் ஒன்று கண்டேன்.
தம்பியில்லா குறைதன்னில்
தவித்திட்டேன் பலகாலம்
சின்னஞ்சிறு பாலகனாய்
சிரித்திட்ட அம்முகத்தை
இன்றைக்கு தேடுகிறேன்
எங்கும் கிடைக்கலியே
"அவனை எழுப்பாதீர் ,
அப்படியே தூங்கட்டும் "என
கம்பநாடன் தாசனாம் கண்ணதாசன் எழுதிட்டான்
கண்ணீரை நானிங்கே
காட்டி நின்றேன் என்முகத்தில்
பசுமரத்தாணி என பதிந்திட்ட
அவன் உருவம்
பாவியென் நெஞ்சமதை பாலூற்றாய் மாற்றிடுதே
நெஞ்சில் இரக்கமின்றி நேர்மை திறனுமின்றி
அவனுயிரை கவர்ந்திட்ட
அந்தகனை சாடுகிறேன்.
என்னிடத்தில் கேட்டிருந்தால்
என்னையே தந்திருப்பேன்.
எமனுக்கு தெரியலியே
எது தர்மம் என்னென்று!
ஊர்வாயில் விழுந்ததினால்
உலகம் மாறி சென்றனையோ?
உத்தம சகோதரனே உண்மையை சொல்லையா
.
.