பா பா பா பா பாயாசம்!

பாயாசமாம் பாயாசம்
பயத்தம் பருப்பு பாயாசம்
வலையப் போட்டு தேடினாலும்
கிடைக்காதுனக்கு நெய் வாசம்

எட்டிப் பார்த்தா ஆகாசம்
சட்டிக்குள்ளே பாயாசம்
பட்டிக்காட்டு பால்வாசம்
இனிக்கும் நல்ல சகவாசம்

பாயாசத்த பார்த்துப்புட்டா
இருக்க முடியா துபவாசம்
சுவையில் தானே தெரிஞ்சுக்கணும்
வைத்த கைகளோட பாசம்

பெரியோர் தருவது உபதேசம்
மழலை தருவது சந்தோசம்
சர்க்கரை போட்ட பாயாசம்
நிரப்பும் வயிற்றுப் பிரதேசம்

புத்தம் புதிய பாயாசம்
புண்ணியம் செய்த பாயாசம்
பூமி பார்க்க வந்ததெங்கள்
புனிதா வைத்த பாயாசம்!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Mar-13, 12:35 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 272

மேலே