ஆம்பளை !...

பெண்ணை மதிக்காதவன்
பொதுவாக சொல்லும்வார்த்தை
நா ஆம்பளடா!...
பெண்ணை மதிக்கத்தெரியாதவன்
பெண்களிடம் சொல்லும்வார்த்தை
பொட்டச்சி நீ!...
பெண்ணை சமமாக நடத்தத்தெரியாதவன்
பெரும்பாலும் சொல்லும்வார்த்தை
பொம்பளையா நடந்துகோ!...
ஆண்களே! ஆண்களே!
இதுபோன்ற எண்ணங்களே
நம்மை கீழ்தரப்படுத்தும்...
ஆணவம் வளர்க்கும்
அர்த்தமற்ற எண்ணங்களை
அடியோடு அழிப்போம்
பெண்மையை மதிப்போம்
பேராண்மையோடு வாழ்வோம்
பேரின்பம் காண்போம்...