என் கண்ணீர்

செல்லும் இடமெல்லாம்
என் கண்ணீர் துளியைப்
பதித்து விட்டுத் தான் செல்கிறேன் ..
தடம் மாறாமல் வந்துவிடு,
துளிகள் ஒவ்வொன்றும்
உன்னைப் பற்றிக் கூறும்
கதைகளைக் கேட்டுக் கொண்டே ..
விரைவில் வந்து விட்டால்
உன் மண அறையில்
உயிரோடு உயிராக
சேர்ந்து துடிப்பேன் ..
தாமதிப்பாயானால்
என் கல்லறையில்
மண்ணோடு மண்ணாக
கலந்து கிடப்பேன் ..