கவிதை

அவள் போல்
கவிதை எழுதுவான் - இவன்
கவிதையை மறந்து
எங்கே சென்றது என் மனம்
என்னையே விட்டு - எப்படி
சொல்வது என் மனமென
தமிழ் மொழியும் காதலித்தது
தமிழ் பேசிய உன்னை
நம் பாதங்களை அழித்த கடல்
உன் ஜோடியான - என் பாதம் மேல்
கொண்ட பொறமையால்
நான் பருகிய சுவாசம்
நீ தான் நினைத்தேன்
ஆனால் ஆக்ஸிஜனாம்
ஒளி கண்டேன் உன்னில்
சூரியன் அழுததது
சூடு தாங்காமல்
மழையும் எங்கே
குளிரும் எங்கே
கட்டிய என்னை விடுவிக்க
அறிந்தேன் - இவைகள்
இருந்தது இங்கே
ஈரமானது நெஞ்சு
இருந்ததால் நீயாக - இன்று
ஈரமானது கண்கள்
இல்லாத உனக்காக