நான் நேசிக்கும் தளம்

எழுத்து தளத்தில்

எது நடந்தாலும் எனக்கென்ன என்றிருக்க
இது ஆசையால் இணைந்த நட்பல்ல

எட்டியிருந்தாலும் தட்டிக் கேட்கும்
எழுத்தால் இணைந்த நட்பு

சுட்டி கண்பிப்போரை சுழற்றியடிக்கும்
சூறாவளியாக இருக்காதீர்

தட்டி கொடுப்பதாக நினைத்து
தகுதியை உயர்த்தும் தன்மானம் பெறுவீர்

தகாத வார்த்தையால் தடம் பதிக்க
தரமற்றதில்லை இத் தளம்

தளர்ந்திருக்கும் படைப்பை தகுதியானவர்களால்
தன்னிலை பெற செய்யும் தரமான இடம்

பொறாமையுடன் வாதம் செய்வதாக நினைத்து
வலி கொள்ள வேண்டாம்

படைப்பின்மேலும் தளத்தின்மேலும் கொண்ட
அலாதி வாஞ்சையுடன் செய்யும் அன்பாகும்

கருத்தால் தமது படைப்பு கற்பிழந்ததாக
கலவரமாக்கி காற்று வாங்காதீர்

கருத்தால் கவிதையில் இருக்கும் களை
களையப்படுமென காத்திருங்கள்

கவிதைக்கும் கருவுக்கும், கருத்துக்கும் தலைப்புக்கும்
கற்புண்டு என்பதை மறவாதீர்

ஆடை போர்த்தி அழைத்துவர தாமதமாகுமென
தகுதியை தாழ்த்திக் கொள்ளாதீர்

பாசத்தோடும் பணிவுடனும் சொல்ல வந்தேன்
பரிகாசமின்றி மனமிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்

மறுக்கும் மனமிருந்தால் மரணமில்லை -என்
கருத்துக்கும் படைப்புக்கும் தொடர்வேன் என்றென்றும் .....

எழுதியவர் : bhanukl (16-Mar-13, 7:54 pm)
பார்வை : 213

மேலே