!!!என் தனிமையும் உன் நினைவுகளுக்கு சொந்தமடா !!!
தனிமை மட்டுமே
சொந்தமென நினைத்துகொண்டிருந்தேன் !!!
உன் நினைவுகளாக
என் இதயம் துடிப்பதை மறந்தும்!!!
தனிமையை நான் வெறுத்த
நொடிகளை விட
நேசித்த நொடிகளே அதிகம்
என்னை கடந்து சென்ற
நாட்களில் !!!
என் தனிமை உன்
நினைவுகளுக்கு மட்டுமே
சொந்தம் என்பதால் !!!
தனிமையையும் காதலிக்கிறேன்
உன் நினைவாய்
என்னுள் இருப்பதால் !!!
தனிமை என்ற வார்த்தையை
உச்சரிக்கும் போது
உன் பெயரை உச்சரிப்பதாக
உணர்கிறேன் என்னுள் !!!!
கோடை காலத்தில்
நீரை தேடும் தாகமாய் ...
உன் நினைவுகளை
ஒவ்வொரு நொடியும்
என்னுள் தேடிக்கொண்டிருக்கிறேன் !!!
மழைக்காக காத்திருக்கும்
நிலத்தை போல ....
உன் வரவுக்காக காத்திருக்கிறேன் ...
பாலைவன மலராக...
விடியும் பொழுதும் ....
மறையும் பொழுதும் ...
உன் நினைவுகளுக்கு என
அர்பணிக்கிறேன் !!!
என்னை கடத்து செல்லும்
ஒவ்வொரு நொடியும் ...
உன்னை சொந்தம் கொண்டாட
துடிக்கிறது என் இதயம் ...
என் வாழ்நாள் முழுவதும்
ஒவ்வொரு விடியலும்
உன் முகம் காண ....
புரிதல் இல்லாமல்
பிரிந்து சென்றவனே ...
பிரிய முடியவில்லையடா ....
உன்னை புரிந்து கொண்டதால் ....

