தொடரும் மின் வெட்டு

என்று தணியும் சுதந்திர தாகம்
விடுதலை போரின் வீர ராகம் !
என்று நீங்கும் மின்சார வெட்டு
வாக்களித்த மக்களுக்கு குட்டு !

மின் தடையால் நாடே இருட்டு
கண் இருந்தும் குருடானோம் !
நாளும் மாறிடும் அறிவுப்புகள்
ஆளும் மாறுது அதைசொல்ல !

சாலையே சரியில்லை நாட்டில்
அதுவும் தெரியாது இரவில் !
முட்டி மோதிடும் வாகனங்கள்
முனகிடும் மனிதரின் மூச்சுகள் !

விடிவே இல்லையா நமக்கு
முடிவே வராதா மின்தடைக்கு !
தடையிலா மின்சாரம் கொடு
உடையிலா உடலே நம் நாடு !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (18-Mar-13, 12:28 pm)
பார்வை : 150

மேலே