பிரிவு
நேற்றுவரை நீ என்னவன் என்றிருந்தாய்..
இன்றோ,நான் இழந்தேன் உன்னை,
உன் மீது எனக்கிருந்த உரிமையை...
இதுவரை உன்னோடு இருந்த ஒவ்வொரு நொடியும்
என்னுள்ளே மின்னலாய்த் தோன்றி மறைகின்றன..
எத்தனை எத்தனை கனவுகள்
எத்தனை எத்தனை இனிய தருணங்கள்
எத்தனை பொய் கோபங்கள்,எத்தனை தாபங்கள்
எத்தனை அழுகை,எத்தனை சிணுங்கள்
அத்தனையும் இன்று முடிவுக்கு வந்தது...
மாலையில் உன்னைக் காண
ஆவலுடன் நான் வந்த நாட்கள்...
வியர்வை வடியும் என் நெற்றியுடன்
புத்துணர்ச்சி தரும் குளிர்ச்சியை எதிர்பார்த்து
உன்னிடம் வருவேன்...
ஆனால்,உன் சுவாசமும் வெட்பமாக இருக்கும்..
அதுவும் எனக்குப் பிடிக்கும்..
எனக்காக நீ தந்த அன்புப் பரிசு என ஏற்றுக்கொண்டேன்..
இன்றோடு அந்த பரிசும் எனக்கில்லை என்றானது..
மனிதர்கள் பலரும் என்னை விட்டுச் சென்றனர்..
அதுபோல நீயும் என்னைப் பிரிந்தால்,
அந்த ஒரு நொடியை என் இதயம் தாங்காது..
எனவே,நான் முந்திக்கொண்டேன்..
நீ என்னை விட்டுச் செல்லும் முன்பே,
நான் உன்னைப் பிரியத் துணிந்தேன்...
கண்ணீர் துளிகளையும் சிரிப்பு அலைகளையும்
என் ஞாபகங்களாக
உன்னிடம் விட்டு,
நான் போகிறேன்
வேறொரு வீட்டிற்கு...