"நிலவு போன்ற முகம்"

வருடத்திற்கு ஒன்றென வந்த வரிசையின்

புதுவரவாக வந்தாள் மகள்!

தன தந்தை பரம ஏழை என்பதையும் அறியாமல்

மலர்ந்து சிரித்தாள் அந்த மலர்விழி!

சொந்தங்களுக்குக் குறைச்சலில்லை...

அதில் ஒருவனோ,"நிலவு போன்ற முகம்!" என வாழ்த்தினான்..

பாவம்,

நிலவின் முகத்தில் உள்ள

பள்ளங்களையும் கரைகளையும் அவன் அறியவில்லை!!



எழுதியவர் : Indra (22-Nov-10, 10:44 pm)
சேர்த்தது : indra
பார்வை : 530

மேலே