உனக்காகவே எழுதியவை

தரையில் தடுமாறுகிறேன்
தண்ணீரில் நடக்கிறேன் உன்னோடு
கைபிடித்து நடக்கையில்

பறவையின் இறகுகள்
பறக்க மறுக்கின்றன உன்னோடு
நடக்க துடிக்கின்றன

ஊதினால் புல்லாங்குழலும்
இசைக்க மறுக்கிறது உன்
காதணியோடு தோற்கும் என
உன் மீது சாய்ந்த போது
நானும் அறிந்தேன்

சூரியன் பட்டு போகும்
உன் நெற்றி பொட்டில்

சந்திரன் தொட்டு கும்மிட
ஆசைதான் எனக்கு
உன் பாதம் மெட்டில்

குட்டுவாய் என் தலையில்
கேபிக்காமல் எழுவேன் உன்
கோபம் ரசிக்க

பத்தும் விளக்குவாய் படிப்படியாய்
பாடம் படிக்கா ஆசிரியை உன்
பாடம் படிக்கஆசையோடு

வீசும் காற்றும் சொல்லும்
உன்னை தொட்ட பின்பு
பாசம் என்ற ஒன்றை

அம்மா !!!
இவை யாவும் உனக்கு எழுதியவை
உனக்காகவே எழுதியவை

எழுதியவர் : sugan (19-Mar-13, 4:49 pm)
பார்வை : 119

மேலே