நிலவு பிடிக்கும்

வானும் பிடிக்கும் எனக்கு
அதில் வரைந்த வட்டநிலவும் பிடிக்கும்,

வட்டநிலவில் வடைசுடும்
அந்தக்கிழவிக்காகவுமல்ல....

அலைந்துகிடக்கும் அந்த
மேகக்கூட்டத்துடன்
அது ஒளிந்து விளையாடிக்கிடக்கும்
என்பதாலும் அல்ல....

குளிர்ந்த மனவலைகளை
அமைதியாய் விதைத்திடும் என்பதாலுமல்ல...

காதல் நாயகியாய் கவிதைகளைச்
சுமந்து வரும் என்பதாலுமல்ல....

என் கண்ணாளனுக்கு என்காதல்
கொண்டுசெல்லும் தூதாலுமல்ல...

அது வானுக்கு அழகு, ஒளி
தரும் என்பதாலும் அல்ல...

அது உன் பெயரின் முதல் எழுத்தில்
தன் பெயரை ஆரம்பித்திருப்பதால்...

எழுதியவர் : தீ (19-Mar-13, 4:47 pm)
பார்வை : 115

மேலே